தமிழ் சிந்தனை யின் அர்த்தம்

சிந்தனை

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதனுக்கு மட்டும் உரியதாகக் கருதப்படும்) அறிவைப் பயன்படுத்திப் பகுத்துப் பார்க்கும் திறன்.

  ‘மனிதனின் சிந்தனை இயற்கையை வெல்ல உதவியது’

 • 2

  (பகுத்தறியும் திறனால் பெறும்) எண்ணம்; கருத்து.

  ‘அவருடைய இலக்கணச் சிந்தனைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன’

 • 3

  (ஒன்றைக் குறித்த) எண்ணம்; நினைவு.

  ‘அவர் படிக்க ஆரம்பித்துவிட்டால் உலகச் சிந்தனையே இருக்காது’
  ‘உனக்கு எப்போதுமே பணத்தைப் பற்றிய சிந்தனைதானா?’
  ‘என்ன, சிந்தனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்?’