தமிழ் சின்ன யின் அர்த்தம்

சின்ன

பெயரடை

 • 1

  (அளவைக் குறித்து வரும்போது) சிறிய.

  ‘சின்னப் பை’
  ‘சின்னக் குழந்தை’
  ‘சின்னத் தெரு’

 • 2

  (தன்மையைக் குறித்து வரும்போது) சாதாரண; அற்ப.

  ‘ஒரு சின்ன வேலையைச் செய்யக்கூட அலுத்துக்கொள்கிறாயே!’
  ‘தேவையே இல்லாமல் ஒரு சின்ன விஷயத்தில் தலையிட்டு மாட்டிக்கொண்டான்’

 • 3

  (வயதை அல்லது உறவு முறையைக் குறித்து வரும்போது) இளைய.

  ‘இவன் என் சின்னத் தம்பி’
  ‘என் சின்னப் பையன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான்’
  ‘சின்ன மாமனார்’
  ‘என் சின்ன சித்தப்பாதான் ஊரில் விவசாயத்தைக் கவனித்துக்கொள்கிறார்’

 • 4

  (தலைமுறைதலைமுறையாக அதிகாரம் தொடரும்போது அதிகாரத்தைத் தொடர இருப்பவரின் பெயருக்கு முன்) இளைய.

  ‘சின்ன பண்ணையார்’
  ‘சின்ன சாமியார்’