தமிழ் சிப்பி யின் அர்த்தம்
சிப்பி
பெயர்ச்சொல்
- 1
ஒரு வகைக் கடல்வாழ் உயிரினத்தின் இரு பிரிவாகப் பிரியும் ஓடு/முத்து உள்ளடங்கியுள்ள ஓடு.
‘கடற்கரையில் சிப்பி பொறுக்கலாம்’‘முத்துச் சிப்பி’ - 2
இலங்கைத் தமிழ் வழக்கு அரிசி மாவில் சர்க்கரை, தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் சுட்டு எடுக்கும் சிப்பி வடிவ இனிப்புப் பண்டம்.