தமிழ் சிரஞ்சீவி யின் அர்த்தம்

சிரஞ்சீவி

பெயர்ச்சொல்

 • 1

  நீண்ட ஆயுள் உடையவர்.

  ‘‘சிரஞ்சீவியாக இருங்கள்’ என்று பெரியவர் மணமக்களை வாழ்த்தினார்’

 • 2

  (கலை, இலக்கியம் போன்றவற்றைக் குறிக்கும்போது) அழியாதது; அழியாப் புகழை உடையது.

  ‘சிரஞ்சீவித் தன்மை வாய்ந்த காவியம்’

 • 3

  (கடிதம், திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) வயதில் இளைய ஆணின் பெயருக்கு முன் வாழ்த்தும் முறையில் இடப்படும் சொல்.

  ‘‘சிரஞ்சீவி பாலுவுக்கு’ என்று அப்பாவின் கடிதம் ஆரம்பித்தது’