தமிழ் சிரமம் யின் அர்த்தம்

சிரமம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தேவையானது இல்லாமல் அல்லது கிடைக்காமல் படும்) கஷ்டம்.

  ‘இந்த நகரில் வாடகைக்கு வீடு கிடைப்பது சிரமம்’
  ‘வேலையில்லாமல் நான் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல’

 • 2

  தொந்தரவு.

  ‘உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்க வேண்டும்’
  ‘எனக்கு ரொம்ப வயதாகிவிட்டது; என்னால் அடுத்தவர்களுக்குச் சிரமம்தான்’

 • 3

  கஷ்டப்பட்டு மேற்கொள்கிற முயற்சி அல்லது வேலை.

  ‘மிகுந்த சிரமத்துடன்தான் இந்த இலக்கிய இதழை நடத்திவருகிறேன்’
  ‘அப்பா இறந்த பிறகு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் சிரமத்தைச் சொல்லி மாளாது’
  ‘எனக்கு வீடு பார்த்துத் தருவதற்கு அண்ணன் ரொம்ப சிரமம் எடுத்துக்கொண்டார்’