தமிழ் சிரிப்பு யின் அர்த்தம்

சிரிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில்) சிரிக்கும் செயல்.

  ‘அந்த இளைஞனின் வித்தியாசமான ஆடையலங்காரத்தைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது’
  ‘அவளுடைய கலகலவென்ற சிரிப்பைத் தவறாக எடுத்துக்கொள்ளாதே!’

 • 2

  (பிறர்) ஏளனத்தையும் கிண்டலையும் வெளிப்படுத்துவது.

  ‘அவருடைய நடத்தை ஊராரின் சிரிப்புக்கு இடமானது’
  ‘பிறர் சிரிப்புக்கு ஆளாகிறமாதிரி நடந்துகொள்ளாதே’

 • 3

  (திரைப்படம், நாடகம், பத்திரிகைகள் முதலியவற்றில்) நகைச்சுவை.

  ‘அப்பாவி வேடங்களில் நடித்துச் சிரிக்க வைப்பதில் கைதேர்ந்த சிரிப்பு நடிகர்’
  ‘சிரிப்பு நடிகை’
  ‘சிரிப்புக் கதை’