தமிழ் சிறகு யின் அர்த்தம்

சிறகு

பெயர்ச்சொல்

 • 1

  இறக்கை.

  ‘சிறகு ஒடிந்த பறவைபோல’
  உரு வழக்கு ‘கற்பனைச் சிறகு விரித்துப் பறந்தான்’

 • 2

  (கட்டப்பட்ட ஒரு அமைப்பில்) இரு பிரிவாக இருப்பவற்றுள் ஒன்று.

  ‘உங்கள் வீட்டுக் கதவு ஒற்றைச் சிறகா, இரட்டைச் சிறகா?’
  ‘வீட்டின் விசாலமான இரு சிறகுகளிலும் சிலம்பக் கூடம் அமைந்திருந்தது’
  ‘தெருவின் இரண்டு சிறகுகளிலும் ஒரே மாதிரியான வீடுகள்’