தமிழ் சிறப்பி யின் அர்த்தம்

சிறப்பி

வினைச்சொல்சிறப்பிக்க, சிறப்பித்து

 • 1

  (ஒருவரை) கௌரவப்படுத்துதல்; (ஒன்றை) சிறப்புடையதாக ஆக்குதல்.

  ‘அரசு சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது’
  ‘பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’

 • 2

  (ஒன்றிற்கு) முக்கியத்துவம் தந்து மேன்மைப்படுத்துதல்.

  ‘கவிஞர் இப்பாடலில் காதலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்’