தமிழ் சிறப்பு யின் அர்த்தம்

சிறப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சிறந்த முறையில் அமைந்திருப்பது.

  ‘அவருடைய சிறப்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது’
  ‘தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி கபடிப் போட்டியின் இறுதிச்சுற்றில் நுழைந்தார்கள்’
  ‘மகளுடைய திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தினார்’
  ‘சிறப்பான கச்சேரி’

 • 2

  தனித் தன்மை; தனித்துவம்; விசேஷத் தன்மை.

  ‘பாடகரை அனுசரித்து மிருதங்கம் வாசிப்பது அவருடைய சிறப்பு’
  ‘நகைச்சுவையும் சோகமும் கலந்த நடிப்பு சார்லி சாப்ளினின் சிறப்பாகும்’

 • 3

  பெருமை; புகழ்; மதிப்பு.

  ‘ஒரு காலத்தில் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் இவர் சிறப்புப் பெற்றிருந்தார்’
  ‘அதிகமான சதங்கள் அடித்தவர் என்கிற சிறப்பை டெண்டுல்கர் பெற்றார்’

 • 4

  வழக்கமானதாக இல்லாமல் குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் செயல்படுத்தப்பட்டது அல்லது உருவாக்கப்பட்டது; விசேஷமானது.

  ‘திருவிழாவை முன்னிட்டுச் சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டுள்ளன’
  ‘இது பொது விதி அல்ல, சிறப்பு விதி’
  ‘அவருடைய சேவையைப் பாராட்டிச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’
  ‘இது இலக்கணத்திற்கான சிறப்பகராதி ஆகும்’
  ‘பிரதமரின் சிறப்புப் பேட்டி இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்’