சிறிது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிறிது1சிறிது2சிறிது3

சிறிது1

பெயர்ச்சொல்

 • 1

  (உருவம், வடிவம் போன்றவற்றில்) குறைந்த அளவைக் கொண்டது; அதிகமாக அல்லது பெரியதாக இல்லாதது.

  ‘சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள் அங்கு இருந்தன’

 • 2

  கொஞ்சம்.

  ‘உன்னால் சிறிது நேரம்கூடப் பேசாமல் இருக்க முடியாதா?’

சிறிது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிறிது1சிறிது2சிறிது3

சிறிது2

வினையடை

 • 1

  சிறிய அளவில்; கொஞ்சம்; சற்று.

  ‘நீ சொல்வது நான் நினைத்திருப்பதோடு சிறிது ஒத்துப்போகிறது’
  ‘உன் திருமணத்தைச் சிறிது தள்ளிப்போட்டால்தான் என்ன?’
  ‘முந்திரியைச் சிறிது வறுத்துக்கொள்ள வேண்டும்’
  ‘சிறிது யோசி, என்ன செய்வது என்று உனக்குப் புரியும்’
  ‘அவருடன் சிறிது பேசிப்பார்’

சிறிது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிறிது1சிறிது2சிறிது3

சிறிது3

இடைச்சொல்

 • 1

  (குறிப்பிடப்படும்) தன்மையை மிகுவிக்கவோ அல்லது குறைக்கவோ பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இன்னும் சிறிது வேகமாக ஓடினால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும்’
  ‘சிறிது சத்தமாகப் பேசினால்தான் தாத்தாவின் காதில் விழும்’
  ‘சிறிது அகலமாகச் சாலையைப் போட்டிருந்தால் வசதியாக இருக்கும்’