தமிழ் சிறிய யின் அர்த்தம்

சிறிய

பெயரடை

 • 1

  அளவில் குறைவாக உள்ள; பெரியது அல்லாத.

  ‘சிறிய வீடு’
  ‘சிறிய கிரகம்’
  ‘சிறிய தொகை’
  ‘ஏதோ என்னால் ஆன சிறிய உதவி’

 • 2

  (உறவு முறையில்) மூத்தவருக்கு அடுத்து வருகிற/(உறவுப் பெயர் குறிப்பிடுபவரைவிட) இளைய.

  ‘சிறிய மகள்’
  ‘சிறிய மகன்’
  ‘சிறிய அத்தை’
  ‘சிறிய மாமா’
  ‘சிறிய தாத்தா’