சிறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிறு1சிறு2

சிறு1

வினைச்சொல்சிறுக்க, சிறுத்து

 • 1

  (உடல்) சுருங்குதல்.

  ‘வயது, நோய் காரணமாக உடல் சிறுத்துக்கொண்டேவருகிறது’

 • 2

  (அவமானம், அவமதிப்பு முதலியவற்றால் ஒருவரின் முகம், உடல்) குறுகுதல்.

  ‘அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டியதும் அவன் முகம் சிறுத்தது’
  ‘மகனின் நடத்தையைப் பற்றிப் பலர் கேவலமாகக் கூறக் கேட்டு உடல் சிறுத்து நின்றாள்’

 • 3

  (உறுப்புகள், பாகங்கள் போன்றவை) சிறிய அளவில் அமைதல்.

  ‘பிறவியிலேயே அவனுக்கு ஒரு கை சிறுத்திருந்தது’
  ‘பலாக் காய்கள் சிறுத்துக் காணப்படுகின்றன’

சிறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிறு1சிறு2

சிறு2

பெயரடை

 • 1

  சிறிய.

  ‘சிறு குழந்தை’
  ‘சிறு ரகத் துப்பாக்கி’
  ‘சிறு உதவி’
  ‘சிறு வியாபாரிகள்’