தமிழ் சிறுசு யின் அர்த்தம்

சிறுசு

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு சிறிது.

  ‘வீடு ரொம்பச் சிறுசு’
  ‘சட்டை சிறுசாகப் போய்விட்டது’

 • 2

  பேச்சு வழக்கு சிறு குழந்தை.

  ‘இந்தச் சிறுசை எதற்கு வெயிலில் அழைத்து வந்திருக்கிறாய்?’

 • 3

  பேச்சு வழக்கு (பன்மை விகுதியுடன் வரும்போது) இளம் ஜோடி.

  ‘சிறுசுகளைக் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்க விடு!’