தமிழ் சிறை யின் அர்த்தம்

சிறை

பெயர்ச்சொல்

  • 1

    (தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்குக் காத்திருப்பவரை) காவலில் அடைத்து வைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்; அந்தக் கட்டடத்தில் உள்ள அறை.

    ‘அந்தச் சிறிய சிறைக்குள் நிறைய கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்’
    உரு வழக்கு ‘அவளுடைய அன்புச் சிறையிலிருந்து மீள முடியாமல் தவித்தான்’