தமிழ் சிறை நிரப்புப் போராட்டம் யின் அர்த்தம்

சிறை நிரப்புப் போராட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    அரசின் கொள்கைகளைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சியினரோ மக்களில் ஒரு பிரிவினரோ மறியல் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெருமளவில் கைதாகிச் சிறைக்குச் செல்லும் வகையில் நடத்தும் போராட்டம்.

    ‘ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்துச் சிறை நிரப்புப் போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன’
    ‘அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த வாரம் முதல் சிறை நிரப்புப் போராட்டம் நடத்துவோம் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்தனர்’