தமிழ் சில்லிடு யின் அர்த்தம்

சில்லிடு

வினைச்சொல்சில்லிட, சில்லிட்டு

 • 1

  (உடல், தரை, சுவர் போன்றவை வெப்பம் இழந்து) குளிர்தல்.

  ‘இறந்த குழந்தையின் உடல் சில்லிட்டிருந்தது’
  ‘குளிரில் தரையெல்லாம் சில்லிட்டுப்போயிருந்தது’

 • 2

  (அதிர்ச்சியால் அல்லது பயத்தால்) உறைந்துபோவதைப் போன்ற உணர்வு ஏற்படுதல்.

  ‘கதாநாயகி கொல்லப்படும் காட்சியில் எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டுவிட்டது’