தமிழ் சிலிர் யின் அர்த்தம்

சிலிர்

வினைச்சொல்சிலிர்க்க, சிலிர்த்து

 • 1

  (குளிர், பயம் முதலியவற்றால் மயிர்க்கால்கள் சிறிது புடைத்து) முடிகள் படிந்த நிலையிலிருந்து சற்று மேலே நீளுதல்/அப்படி நீளச் செய்தல்.

  ‘குளிரால் உடலில் இருந்த ரோமங்கள் சிலிர்த்து நின்றன’
  ‘சிங்கம் எழுந்து நின்று பிடரியைச் சிலிர்த்துக்கொண்டது’

 • 2

  (உடல் அல்லது உள்ளம்) கிளர்ச்சி அடைதல்.

  ‘அந்தத் தெய்வீக இசையைக் கேட்டு உடம்பு சிலிர்த்தது’
  உரு வழக்கு ‘உள்ளம் சிலிர்க்கச் செய்யும் அனுபவம்’