தமிழ் சிவ யின் அர்த்தம்

சிவ

வினைச்சொல்சிவக்க, சிவந்து

 • 1

  சிவப்பு நிறம் அடைதல்.

  ‘கோபத்தில் முகம் சிவக்கப் பேசினார்’
  ‘அந்தி வெயிலால் வானம் சிவந்து காணப்பட்டது’

 • 2

  (எண்ணெயில் அப்பளம், வடை போன்றவை வெந்து) பொன்னிறம் அடைதல்.

  ‘வடை சிவந்ததும் எடுத்துவிடு’
  ‘முறுக்கு இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்’

 • 3

  வட்டார வழக்கு (நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்) திட்டுத்திட்டாகச் சிவப்பு நிறத்துடன் காணப்படுதல்.

  ‘பாதிப் பயிர் சிவந்துவிட்டது. என்ன விளையப்போகிறது?’