தமிழ் சிவனேயென்று யின் அர்த்தம்

சிவனேயென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எதிலும் தலையிடாமல்; எதுவும் செய்யாமல்.

  ‘அங்கு என்ன நடந்தால் உனக்கு என்ன, சிவனேயென்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதானே’
  ‘வயதான காலத்தில் சிவனேயென்று வீட்டில் இருக்காமல் ஏன் இப்படி அலைகிறீர்கள்?’

 • 2

  பேச்சு வழக்கு எதிர்க்காமல் மௌனமாக; அடங்கி.

  ‘அவர் திட்டியதையெல்லாம் சிவனேயென்று கேட்டுக்கொண்டிருந்தான்’