தமிழ் சிவப்பு யின் அர்த்தம்

சிவப்பு

பெயர்ச்சொல்

 • 1

  இரத்தம், குங்குமம் முதலியவற்றைப் போன்ற நிறம்.

 • 2

  (ஒருவருடைய நிறத்தைக் குறிப்பிடும்போது) (கருப்பு என்பதன் எதிரிடையாக) வெளிர் நிறம்.

  ‘என் அம்மா நல்ல சிவப்பாக இருப்பாள்’
  ‘குழந்தை அம்மாவைப் போல் சிவப்பு’
  ‘மாப்பிள்ளை சிவப்பு என்று சொல்ல முடியாது, மாநிறம்தான்’