தமிழ் சிவராத்திரி யின் அர்த்தம்

சிவராத்திரி

பெயர்ச்சொல்

  • 1

    (மாசி மாதத்தில்) விரதமிருந்தும் விழித்திருந்தும் சிவனை வழிபடும் இரவு.

    ‘சிவராத்திரி என்பதால் இன்று இரவு முழுதும் கோயில் திறந்திருக்கும்’

  • 2

    (சூழ்நிலையின் நிர்ப்பந்தம் காரணமாக) இரவில் விழித்திருக்க வேண்டிய நிலை.

    ‘குழந்தை இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்ததால் நேற்று எங்களுக்குச் சிவராத்திரிதான்’