தமிழ் சீக்கிரமாக யின் அர்த்தம்

சீக்கிரமாக

வினையடை

 • 1

  (ஒன்று நிகழ்வதைக் குறித்து வரும்போது) வேகமாக; விரைவாக; விரைவில்.

  ‘சீக்கிரமாகக் கடைக்குப் போய் ஒரு மெழுகுவர்த்தி வாங்கி வா!’
  ‘சீக்கிரம் உனக்குப் பதவி உயர்வு கிடைக்கும்’

 • 2

  குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக.

  ‘இன்று அலுவலகத்துக்குச் சீக்கிரம் வந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே?’