தமிழ் சீதளம் யின் அர்த்தம்

சீதளம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு குளிர்ச்சி.

  ‘மொட்டை மாடியில் நிலவின் சீதள ஒளியை அனுபவித்தோம்’

 • 2

  அருகிவரும் வழக்கு ஈரம்; ஈரப்பசை.

  ‘பருத்தியிலிருந்து நூல் நூற்கச் சீதளம் மிகுந்த காற்று அவசியம்’

 • 3

  சித்த வைத்தியம்
  உடம்பில் மட்டுமன்றி, சளி, பசியின்மை போன்ற அறிகுறிகளாலும் உணரப்படும் (பசும்பால், எலுமிச்சை சாறு போன்ற) உணவுப் பொருள்களாலோ மருந்துகளாலோ ஏற்படும் வெப்பக்குறைவு அல்லது குளுமை; குளிர்ச்சி.

  ‘சீதளமான உடம்பு’
  ‘வெள்ளரிக்காய் சீதளம்’