சீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சீர்1சீர்2சீர்3

சீர்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பல்வேறு காலங்களில் அல்லது நிலைகளில் தொடரும்போது) வேறுபாடு இல்லாதது; (ஒரே) அளவாக இருப்பது.

  ‘நகர வளர்ச்சி சீரற்ற முறையில் போய்க்கொண்டிருக்கிறது’
  ‘எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை சீராக ஓடிக்கொண்டிருக்கிறது’
  ‘நாடு முழுவதும் ஒரே சீரான விற்பனை வரி வசூலிக்கப்பட வேண்டும்’

 • 2

  இயல்பான தன்மை; ஒழுங்கு.

  ‘சீராகப் போய்க்கொண்டிருந்த பேருந்து மக்கர் செய்ய ஆரம்பித்தது’
  ‘மருத்துவப் பரிசோதனையில் அவன் இதயம் சீராக இயங்கவில்லை என்று தெரியவந்தது’

 • 3

  (பங்கீடு, வருவாய் முதலியவற்றைக் குறிக்கும்போது) சமம்.

  ‘இனிப்புகளைச் சீராகப் பங்கிட்டுக் கொடுத்தேன்’
  ‘உணவுப் பொருள்களின் சீரான வினியோகத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’

 • 4

  (ஒன்றைச் செய்வதில் உள்ள) நேர்த்தி; அழகு.

  ‘பொருள்களை அவன் எடுத்து வைத்த சீரைப் பார்த்ததும் வேலை பழகியவன் என்பது தெரிந்துவிட்டது’

சீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சீர்1சீர்2சீர்3

சீர்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகள், சகோதரி போன்றோருக்குக் கொடுக்கும் பொருள்; சீதனம்.

  ‘அவர்களுக்கு ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட சீர் செய்திருக்கிறார்கள்’

சீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சீர்1சீர்2சீர்3

சீர்3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  அசைகள் ஒன்றுசேர்ந்த செய்யுளின் உறுப்பு.

  ‘அறுசீர் விருத்தம்’
  ‘இந்த வெண்பாவைச் சீர் பிரித்து எழுதுக’