தமிழ் சுகப்படு யின் அர்த்தம்
சுகப்படு
வினைச்சொல்
- 1
(பெரும்பாலும் எதிர்மறை வினையோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) பயனுடையதாக அமைதல்.
‘இந்தத் தலைவலிக்கு எத்தனையோ வைத்தியம் செய்துகொண்டேன். ஒன்றும் சுகப்படவில்லை’‘இந்த ஆராய்ச்சி நிறுவனத்தைச் சீர்செய்ய எவ்வளவோ முயன்றேன். ஒன்றும் சுகப்படவில்லை’