தமிழ் சுகாதாரம் யின் அர்த்தம்

சுகாதாரம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (சுத்தத்தைக் கடைப் பிடிப்பதன்மூலம் நோய் இல்லாமல் உடலை அல்லது சுற்றுப்புறத்தை) ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற நிலை அல்லது வழிமுறை.

    ‘எங்கள் உணவுப் பொருள்கள் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டவை’
    ‘அடிப்படைச் சுகாதார வசதிகள்கூட இல்லாத கிராமம்’
    ‘சுகாதாரத் துறை’