தமிழ் சுடச்சுட யின் அர்த்தம்

சுடச்சுட

வினையடை

 • 1

  (உணவுப் பொருள்களைக் குறிக்கும்போது) (அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு) மிகுந்த சூட்டுடன்.

  ‘தோசையைச் சுடச்சுடச் சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும்’
  ‘சுடச்சுட ஒரு காப்பி கொண்டுவா!’

 • 2

  உடனடியாகவும் உறைக்கும் வகையிலும்.

  ‘சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சுடச்சுடப் பதில் அளித்தார்’

 • 3

  காலம் தாழ்த்தாமல் உடனடியாக.

  ‘செய்திகளைச் சுடச்சுடத் தரும் செய்தித்தாள்’
  ‘தேர்தல் முடிவுகள் சுடச்சுட இணையத்தில் வெளியாயின’