தமிழ் சுட்டிக்காட்டு யின் அர்த்தம்

சுட்டிக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரை) தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுதல்; சுட்டுதல்.

  ‘இரண்டாவது மாடியைச் சுட்டிக்காட்டி, ‘அதுதான் என் வீடு’ என்று நண்பர் சொன்னார்’
  ‘‘அவர்தான் என் நண்பர்’ என்று தூரத்தில் நின்றிருந்தவரைச் சுட்டிக்காட்டினான்’
  ‘என் தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்’

 • 2

  (ஒரு கருத்தை) தெளிவாகக் குறிப்பிட்டுக் கூறுதல்; எடுத்துக்காட்டுதல்.

  ‘இந்தத் திட்டத்தினால் சுற்றுப்புறச் சூழலுக்குப் பல கேடுகள் விளையும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது’
  ‘பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துவருவதைச் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன’
  ‘மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறாததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்’