தமிழ் சுட்டு யின் அர்த்தம்

சுட்டு

வினைச்சொல்சுட்ட, சுட்டி

  • 1

    குறிப்பிடுதல்; (குறிப்பிட்ட ஒன்றை) உணர்த்துதல்.

    ‘‘தனிமுடி’ என்ற பழந்தமிழ்ச் சொல் ‘ஏகாதிபத்தியம்’ என்ற பொருளைச் சுட்டுகிறது’

  • 2

    உயர் வழக்கு (ஒருவர் ஒன்றைப் பார்க்கச் செய்யும் விதமாக அதை நோக்கிக் கைவிரலை நீட்டியோ பிற விதத்திலோ) காட்டுதல் அல்லது குறிப்பிடுதல்.

    ‘அவர் சுட்டிய இடத்தில் ஒரு புத்தகம் இருந்தது’