சுடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுடு1சுடு2சுடு3

சுடு1

வினைச்சொல்சுட, சுட்டு

 • 1

  (வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்; (காய்ச்சலால் உடல்) அதிக வெப்பம் அடைதல்.

  ‘தண்ணீர் சுட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி வை!’
  ‘குழந்தையின் உடம்பு இப்படி நெருப்பாகச் சுடுகிறதே?’

 • 2

  (நெருப்பு, வெப்பம் ஆகியவற்றின் சூடு கையில் அல்லது உடலில் படுவதால்) உறைத்தல்.

  ‘சிகரெட் கையைச் சுட்டுவிட்டது’
  ‘பாத்திரம் சுடும்; துணியால் பிடித்து இறக்கு!’
  உரு வழக்கு ‘உண்மை சுடும்’
  உரு வழக்கு ‘அவன் வார்த்தை என் நெஞ்சைச் சுட்டது’

 • 3

  சூடான கல்லில் இட்டு அல்லது எண்ணெயில் பொரித்து அல்லது நேரடியாக நெருப்பில் காட்டி உண்பதற்கு ஏற்ற வகையில் தயாரித்தல்.

  ‘பக்கத்து வீட்டிலிருந்து வடை சுடும் வாசம் வந்தது’
  ‘சுட்ட அப்பளமா, பொரித்த அப்பளமா?’
  ‘ரொட்டி சுடுவதற்கு ஏற்ற அடுப்பு வேண்டும்’

 • 4

  (செங்கல், சுண்ணாம்பு முதலியவற்றைச் சூளையில் இட்டு) அதிக வெப்பத்தில் இறுகச் செய்தல்.

  ‘அறுத்த ஓடுகளைச் சுடுவதற்காகக் காளவாயில் அடுக்கினார்கள்’

சுடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுடு1சுடு2சுடு3

சுடு2

வினைச்சொல்சுட, சுட்டு

 • 1

  (துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றிலிருந்து) குண்டுகளைச் செலுத்துதல்.

  ‘கூட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் சுட்டதில் நான்கு பேர் காயம் அடைந்தனர்’
  ‘தாழ்வாகப் பறந்துவந்த போர் விமானத்தை பீரங்கியால் சுட்டு வீழ்த்தினார்கள்’

சுடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுடு1சுடு2சுடு3

சுடு3

பெயரடை

 • 1

  சூடான.

  ‘சுடு தண்ணீர்’
  ‘சுடு மணல்’
  ‘சுடு சோறு’