தமிழ் சுடுசொல் யின் அர்த்தம்

சுடுசொல்

பெயர்ச்சொல்

  • 1

    (மனத்தைப் புண்படுத்தும்) கடுமையான வார்த்தை.

    ‘‘பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறாயே’ என்ற அப்பாவின் சுடுசொல் அவனை வருத்தியது’
    ‘மாப்பிள்ளையிடமிருந்து இப்படி ஒரு சுடுசொல்லை மாமனார் எதிர்பார்க்கவே இல்லை’