தமிழ் சுணக்கம் யின் அர்த்தம்

சுணக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு வேலையைச் செய்வதில் காணப்படும்) மந்தமான நிலை; தாமதம்.

  ‘வளர்ச்சித் திட்டங்களைச் சுணக்கம் இல்லாமல் நிறைவேற்றவே விரும்புகிறோம்’
  ‘மதிப்புக்கூட்டு வரியை அமல்செய்வதில் சில மாநில அரசுகள் சுணக்கம் காட்டுகின்றன’

 • 2

  வட்டார வழக்கு சுறுசுறுப்பில்லாத நிலை; சோர்வு.

  ‘அவள் காலையிலிருந்தே சுணக்கமாக இருக்கிறாள்’