தமிழ் சுண்டு யின் அர்த்தம்

சுண்டு

வினைச்சொல்சுண்ட, சுண்டி

 • 1

  (சூடுபடுத்தும்போது நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்.

  ‘பாலைச் சுண்டக் காய்ச்சிக் கொடு!’
  ‘குழம்பைச் சுண்ட விட்டுவிட்டாயே!’
  உரு வழக்கு ‘பயத்தில் இரத்தம் சுண்டிப்போயிற்று’

 • 2

  வட்டார வழக்கு (பயறு வகைகளை இருப்புச்சட்டியில்) வாட்டுதல்.

  ‘மொச்சையைச் சுண்டித் தாளித்து வைத்திருந்தாள்’

தமிழ் சுண்டு யின் அர்த்தம்

சுண்டு

வினைச்சொல்சுண்ட, சுண்டி

 • 1

  (ஒரு பொருளின் மீது படும்படி அல்லது ஒரு பொருள் தெறித்து விழும்படி) ஒரு விரலைக் கட்டைவிரலுடன் சேர்த்துவைத்து விசையுடன் நகர்த்துதல்.

  ‘பேருந்து வருவதைப் பார்த்தவுடன் பீடியைச் சுண்டி எறிந்தான்’
  ‘நாணயத்தைச் சுண்டிப் போட்டு முதலில் யார் விளையாடுவது என்று தீர்மானித்தார்கள்’
  ‘சுண்டினால் இரத்தம் வந்துவிடும்; குழந்தை அவ்வளவு சிவப்பு!’

 • 2

  (கயிறு போன்றவற்றை) ஒரு கணம் தொய்வாக விட்டுப் பின்னர் விசையுடன் இழுத்தல்.

  ‘லகானைச் சுண்டி இழுத்ததும் குதிரை நின்றது’
  ‘நரம்பைச் சுண்டும் வலி’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சொடுக்குவதன் மூலம் ஒலி எழுப்புதல்.

தமிழ் சுண்டு யின் அர்த்தம்

சுண்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு கொத்தில் கால் பங்கு.

தமிழ் சுண்டு யின் அர்த்தம்

சுண்டு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் எட்டில் ஒரு பாகம்; ஆழாக்கு.

  ‘இரண்டு சுண்டு அரிசி போட்டு நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி உலை வை’