தமிழ் சுண்டைக்காய் யின் அர்த்தம்

சுண்டைக்காய்

பெயர்ச்சொல்

 • 1

  சுண்டைச் செடியில் கொத்துகொத்தாகக் காய்க்கும் சிறு உருண்டை வடிவக் காய்.

  ‘சுண்டைக்காய் வற்றல்’

 • 2

  அற்பம்.

  ‘அந்தச் சுண்டைக்காய்ப் பயல் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளலாமா?’
  ‘இந்தச் சுண்டைக்காய்ப் பணத்துக்கு எவன் வேலை செய்வான்?’