தமிழ் சுண்ணாம்பு யின் அர்த்தம்

சுண்ணாம்பு

பெயர்ச்சொல்

 • 1

  காளவாயில் சுட்ட சுண்ணாம்புக்கல்.

  ‘வெள்ளை அடிக்கப் பத்து கிலோ சுண்ணாம்பு வாங்கி வா’

 • 2

  மேற்கூறிய பொருளை நீர் ஊற்றி நீற்றிப் பெறும் சாந்து.

  ‘வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவியவாறு என்னிடம் பேசிக்கொண்டிருந்தான்’
  ‘பொங்கலுக்கு முன் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடிப்பார்கள்’