தமிழ் சுதந்திரம் யின் அர்த்தம்

சுதந்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.

  ‘காட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டிய விலங்குகளைக் கூண்டில் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது’
  ‘அவர் சுதந்திரமான மனிதர்’

 • 2

  (அந்நிய நாட்டின் ஆட்சியிலிருந்து) விடுதலை.

  ‘போராடிப் பெற்ற சுதந்திரம் இது’
  ‘சுதந்திர தினம்’

 • 3

  (ஒன்றைத் தடையில்லாமல் ஒருவர் செய்வதற்கான, நிகழ்த்துவதற்கான) உரிமை.

  ‘பேச்சுச் சுதந்திரம்’
  ‘எழுத்துச் சுதந்திரம்’
  ‘இந்தச் சின்ன முடிவை எடுக்கக் கூட வீட்டில் எனக்குச் சுதந்திரம் இல்லை’