தமிழ் சுதாரிப்பு யின் அர்த்தம்

சுதாரிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தடுமாற்றத்தை அல்லது மோசமான நிலைமையை) சமாளிக்கும் திறமை; எச்சரிக்கையாக நடந்துகொள்ளும் பண்பு; சாமர்த்தியம்.

    ‘நான் சுதாரிப்பாக இருந்ததால்தான் குடும்பம் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது’
    ‘நல்ல சுதாரிப்பான பெண்’
    ‘இந்திய அணியினர் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் கடைசியில் சுதாரிப்பாக ஆடி வெற்றி பெற்றனர்’