தமிழ் சுபாவம் யின் அர்த்தம்

சுபாவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவருடைய அல்லது ஒன்றினுடைய) நடத்தையின் அல்லது பண்பின் பொதுவான இயல்பு.

  ‘பெற்றோர்களின் சுபாவம் குழந்தைகளிடமும் இருப்பது இயற்கைதான்’
  ‘அவன் கூச்ச சுபாவம் உடையவன்’
  ‘மான்கள் பயந்த சுபாவம் கொண்டவை’

 • 2

  அருகிவரும் வழக்கு அமைதியான நடத்தை அல்லது குணம்.

  ‘அவர் சுபாவமான ஆள்’
  ‘அவன் சுபாவமாகப் பதில் சொன்னான்’