தமிழ் சும யின் அர்த்தம்

சும

வினைச்சொல்சுமக்க, சுமந்து

 • 1

  (கனமான பொருளைத் தலை, முதுகு போன்ற பகுதிகளில்) தாங்குதல்.

  ‘நெல் மூட்டையைத் தலையில் வைத்துத் தூக்கி வராமல் முதுகில் சுமந்து வந்தான்’
  ‘கழுதை பொதி சுமப்பதுபோல் ஏன் எல்லாவற்றையும் நீயே சுமந்து வருகிறாய்?’

 • 2

  (தாய் கருத்தரித்து குழந்தையை வயிற்றினுள்) தாங்கியிருத்தல்.

  ‘தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறாள்’
  ‘பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை’

 • 3

  (கடன், வேலை, பொறுப்பு, பழி முதலியவற்றை பாரம்போல்) ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘மூத்த மகன் குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்தது’
  ‘எல்லா வேலைகளையும் நானே சுமக்க வேண்டியிருக்கிறது என்று அம்மா அலுத்துக்கொண்டாள்’