தமிழ் சுமை யின் அர்த்தம்

சுமை

பெயர்ச்சொல்

 • 1

  (அழுத்தும்) கனம்; பளு; பாரம்.

  ‘இவ்வளவு சுமையைத் தலையில் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியாது’
  ‘சுமை தாங்காமல் வண்டி குடைசாய்ந்தது’

 • 2

  (கடன், வரி, வேலை முதலியவை) வருத்தும் விதத்தில் அதிகமாக இருக்கும் நிலை.

  ‘கடன் சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்’
  ‘வேலைச் சுமையின் காரணமாக என்னுடைய நாவல் பாதியிலேயே நிற்கிறது’