தமிழ் சுயாட்சி யின் அர்த்தம்

சுயாட்சி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நாடு) பிற நாட்டினுடைய ஆதிக்கம், கட்டுப்பாடு இல்லாமல் தன் நிர்வாகத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் ஆட்சி; சுதந்திரம்.

  ‘பல சிறிய ஆப்பிரிக்க நாடுகள் சமீபத்தில்தான் சுயாட்சி பெற்றுள்ளன’

 • 2

  (மாநிலம், கல்லூரி போன்றவை) நிர்வாகத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் ஓர் உயர்மட்டத் தரப்பின் வசம் விட்டுவிட்டுத் தங்களுடைய உள்நிர்வாகத்தைத் தாங்களே முழுமையாகக் கவனித்துக்கொள்ளும் நிர்வாக முறை.

  ‘சில தனியார் கல்லூரிகளுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது’
  ‘மாநில சுயாட்சி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது’