தமிழ் சுயேச்சை யின் அர்த்தம்

சுயேச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறரால் கட்டுப்படுத்தப்படாமல் தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்ளும் நிலை; சுதந்திரமாகச் செயல்படும் போக்கு.

  ‘குழந்தைகளிடம் சுயேச்சைத் தன்மை இருக்கிறது’
  ‘நகராட்சிகள் சுயேச்சையாக இயங்குகின்றன’
  ‘இந்தியத் திரைப்பட உலகில் திறமை வாய்ந்த இயக்குநர்கள்கூட சுயேச்சையாகச் செயல்படுவது கடினம்’

 • 2

  தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராமல் போட்டியிடும் நிலை.

  ‘சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெறுவது அபூர்வமாகத்தான் நிகழ்கிறது’
  ‘தான் கேட்ட தொகுதியைக் கட்சி தரவில்லை என்பதற்காகச் சுயேச்சையாகப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்’

 • 3

  (பெரும்பாலும் பன்மையில்) எந்தக் கட்சியையும் சார்ந்திராமல் தேர்தலில் போட்டியிடுபவர்.

  ‘வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி 26 சுயேச்சைகளின் மனுக்களை நிராகரித்தார்’

 • 4

  அருகிவரும் வழக்கு சுயாட்சி.

  ‘நந்தர்கள் காலத்திற்குப் பின் கலிங்க நாடு சுயேச்சை அடைந்து தனி நாடானது’