தமிழ் சுர யின் அர்த்தம்

சுர

வினைச்சொல்சுரக்க, சுரந்து

 • 1

  (பால், நீர், எச்சில் முதலியவை) ஊறி வெளிவருதல்.

  ‘தேவையான அளவு பால் சுரக்காததால் குழந்தைக்கு இவள் புட்டிப்பால் கொடுக்கிறாள்’
  ‘சமையல் அறையிலிருந்து வந்த மணம் நாவில் எச்சில் சுரக்கச் செய்தது’
  ‘கணையம் இன்சுலின் என்ற திரவத்தைச் சுரக்கிறது’
  உரு வழக்கு ‘அன்பும் கருணையும் சுரக்கும் நெஞ்சம்’