தமிழ் சுரங்கம் யின் அர்த்தம்

சுரங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (பூமியின் அடியில் இருக்கும் தங்கம், நிலக்கரி, தாது உப்புகள் போன்றவற்றை எடுப்பதற்காக) ஆழமாகத் தோண்டப்பட்ட இடம்.

  ‘தங்கச் சுரங்கம்’
  ‘நிலக்கரிச் சுரங்கம்’
  உரு வழக்கு ‘அறிவுச் சுரங்கம்’
  உரு வழக்கு ‘தமிழில் கட்டுரை எழுதுபவர்களுக்கு இணையதளம் ஒரு சுரங்கம்’