தமிழ் சுரண்டு யின் அர்த்தம்

சுரண்டு

வினைச்சொல்சுரண்ட, சுரண்டி

 • 1

  (ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி, கம்பி முதலியவற்றால்) அழுத்தித் தேய்த்தல்.

  ‘ஜன்னலில் பழைய வர்ணத்தைச் சுரண்டிவிட்டுப் புதிய வர்ணம் பூசியிருக்கிறான்’
  ‘சோறு வடித்த பாத்திரத்தை நன்றாகச் சுரண்டிக் கழுவு!’

 • 2

  (பிறருடைய செல்வம், உழைப்பு போன்றவற்றை) சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளுதல்.

  ‘தொழிலாளர்கள் பலராலும் சுரண்டப்படுகின்றனர்’
  ‘மூன்றாம் உலக நாடுகளின் வளங்களையெல்லாம் பணக்கார நாடுகள் சுரண்டிக்கொள்கின்றன’

 • 3

  தவறான வழியில் (பணம்) சேர்த்தல்; அபகரித்தல்.

  ‘அவர் எவ்வளவு பணம் சுரண்டினார் என்பது மக்களுக்குத் தெரியும்’