தமிழ் சுரணை யின் அர்த்தம்

சுரணை

பெயர்ச்சொல்

  • 1

    தனக்கோ தன்னைச் சுற்றியோ நடக்கும் செயலின் காரணமாக ஒருவரின் உடலில் அல்லது மனத்தில் எதிர்விளைவாக ஏற்படும் உணர்ச்சி.

    ‘கையில் ஊசி குத்தி இரத்தம் வரும் சுரணைகூட இல்லாமல் ஏதோ சிந்தனையில் தைத்துக்கொண்டிருந்தான்’
    ‘அவர் உன்னை மோசமாகத் திட்டுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு சுரணை இல்லாமல் நிற்கிறாயே!’