தமிழ் சுரத்து யின் அர்த்தம்

சுரத்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒன்றில் காட்ட வேண்டிய) ஈடுபாடு; ஆர்வம்.

    ‘ஊருக்குப் போகலாமா என்று கேட்கிறேன். நீ சுரத்தில்லாமல் பதில் சொல்கிறாயே!’
    ‘வேலையில் சுரத்து குன்றிவிட்டதா?’
    ‘வழக்கமான சுரத்து குறைந்து காணப்பட்டான்’