தமிழ் சுரப்பு யின் அர்த்தம்

சுரப்பு

பெயர்ச்சொல்

 • 1

  சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவம்.

  ‘ஜீரண மண்டலத்தில் உற்பத்தியாகும் சுரப்புகள் உணவு ஜீரணமாவதற்கு உதவுகின்றன’

 • 2

  (கால் முதலியவற்றில் நீர் சுரப்பதால் ஏற்படும்) வீக்கம்.

  ‘வயதானவர்களுக்குக் கால்களில் சுரப்பு ஏற்படுவது இயல்பு’

 • 3

  வட்டார வழக்கு (பசுவின் மடியில்) பால் சுரத்தல்/(கிணற்றின் ஊற்றில்) நீர் சுரத்தல்.

  ‘இந்த மாட்டுக்குச் சுரப்பு நன்றாக இருக்கிறது’
  ‘எங்கள் வீட்டுக் கிணற்றில் சுரப்பு வற்றவே வற்றாது’