தமிழ் சுரீரென் யின் அர்த்தம்

சுரீரென்

வினைச்சொல்-என, -என்று

  • 1

    (எறும்பு, பூச்சி முதலியன கடித்தவுடன் அல்லது ஊசி, முள் போன்றவை குத்தியவுடன்) குத்துவது போன்ற வலி உண்டாதல்.

    ‘காலில் முள் குத்தியது, தேள் கடித்ததைப் போலச் சுரீரென்றது’

  • 2

    (கடுமையான சொல், செய்தி முதலியவை மனத்தில்) குத்துவது போன்ற பாதிப்பை ஏற்படுத்துதல்.

    ‘‘நீகூடத் தாத்தாவைக் கவனிப்பதில்லை’ என்று அவர் சொன்னதும் அவளுக்குச் சுரீரென்றது’