தமிழ் சுருக்கம் யின் அர்த்தம்

சுருக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது.

  ‘சொல்வதைச் சுருக்கமாகச் சொல்!’
  ‘சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவர் சுருக்கமாக எழுதியிருக்கிறார்’
  ‘திருமணச் சடங்குகள் சுருக்கமாக இருந்தன’

 • 2

  (கட்டுரை, கதை, பெயர் முதலியவற்றின்) சுருக்கப்பட்ட வடிவம்.

  ‘புத்தகத்தின் பின்அட்டையில் கதைச் சுருக்கம் அச்சிடப்பட்டிருந்தது’
  ‘இது என் ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம்’
  ‘‘ஐ.நா.’ என்பது ‘ஐக்கிய நாடுகள்’ என்பதன் சுருக்கம்’

 • 3

  வட்டார வழக்கு குறைவு.

  ‘அவருக்குச் சொத்துகள் சுருக்கம்’

தமிழ் சுருக்கம் யின் அர்த்தம்

சுருக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தோல், துணி முதலியவை) சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும் நிலை.

  ‘வேட்டியில் எப்படி இத்தனை சுருக்கங்கள்?’
  ‘அவர் எதையோ தீவிரமாக யோசிக்கிறார் என்பதை அவருடைய நெற்றிச் சுருக்கம் காட்டியது’